செவ்வாய், 2 மார்ச், 2010

நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் நித்தியானந்தா சுவாமிகள்: பரபரப்பு - போராட்டம்


சென்னை: பிரபல சாமியார் நித்தியானந்தா, தமிழ் நடிகை ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமக் கிளைகளை பக்தர்களும், பொதுமக்களும் அடித்து நொறுக்கினர். நித்யானந்தாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.

கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் நித்தியானந்தா சுவாமிகளின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை. வெறும் 32 வயதே ஆகும் நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.

தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட நித்தியானந்தாவுக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. பெங்களூரில் மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த தியான பீடம் என்ற பிரபலமான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இது தான் தலைமையகமும் கூட.

உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி ஆன்மிக பணிகள் ஆற்றி வருவதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பல தரப்பினர் மத்தியிலும் பிரபலமான இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வசீகரமாக பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர்.


இந் நிலையில், நித்தியானந்தா, ஒரு நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோவை பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நடிகையின் முகத்தை மட்டும் அந்தத் தொலைக்காட்சி மறைத்து விட்டது. மாறாக அவரது பெயர் 'ஆர்' என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் என்று மட்டும் குறிப்பிட்டது.

அந்த நடிகையும், நித்தியானந்தாவும் சின்னச் சின்ன சில்மிஷங்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைதான் இதை ரகசியமாக படமாக்கியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நடிகைதான் இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பு கூடியது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த உடன், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பெங்களூரில் உள்ள ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர்.

ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச் சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்தனர்.

புதுச்சேரியில் உள்ள இந்த சாமியாரின் யோகா மையம், ஆசிரமம் போன்றவை மக்களால் சூறையாடப்பட்டது. பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.

போலீசார் குவிக்கப்பட்டும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமியாரின் படங்கள் பொருட்களுக்கு தீவைத்தனர்.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள நித்தியானந்தாவுடன் உள்ள நடிகையின் பெயரை சம்பந்தப்பட்ட சேனலும், அதன் குழுமத்தைச் சேர்ந்த நாளிதழும் கூறாமல் விட்டு விட்டதால் அவரது அரைகுறை முகத்தை வைத்து அவர் யார் என்பதை அறிய தமிழகம் முழுவதும் மக்கள் அலை பாய்ந்தவண்ணம் உள்ளனர்.

'உலகின் ஆன்மீக ஒளி நானே' என்று கூறி வந்த நித்யானந்தா, அமெரிக்க இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக