வியாழன், 11 மார்ச், 2010

கணவரைத் தேட உள்ளாடைகளுடன் தெருவில் ஆடிப் பாடிய சீனப் பெண்கள்!!


பெய்ஜிங்: சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெருவில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களை கிரேஸி பியூட்டிஸ் என்று இவர்கள் வர்ணித்துக் கொண்டனர். அனைவருமே திருமண வயதைத் தாண்டியவர்கள். இருப்பினும் இன்னும் மணமகன் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்கள்.

இதனால் வீட்டிலும் ஏச்சுப் பேச்சு கிளம்பியது. இதையடுத்து ஒரு முடிவெடுத்து எட்டு பேரும் குவோங்ஷோ நகரில் உள்ள ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தங்களது உடைகளை படு வேகமாக கழற்றிப் போட்டனர்.

என்ன நடக்கிறது என்பது புரியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது உள்ளாடைகளுடன் தெருவில் இறங்கி ஆடிப் பாட ஆரம்பித்தனர். அங்கு நின்று வேடிக்கை பார்த்த வாலிபர்களை அணுகி தங்களைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்றும் கேட்டனர்.

இதுதவிர தங்களது பயோடேட்டா அடங்கிய தாளையும் அவர்கள் கையில் திணித்தனர். அத்தோடு நில்லாமல் எனது அம்மா என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு அணத்துகிறார் என்ற வாசகம் அடங்கிய தட்டியையும் ஏந்திக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் இந்தக் கூத்து நடந்தது. ஆனாலும் ஒரு வாலிபரும் அவர்களை மணக்க முன்வரவில்லை. இதையடுத்து ஏமாற்றத்துடன் உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக