ஞாயிறு, 7 மார்ச், 2010

மென்பொருள் ஏற்றுமதி மூலம் 49.7 பில்லியன் டாலர் வருவாய் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு.


மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி 5.5 ‌விழு‌க்காடு அளவிற்கு உயரும் என்றும், 2009-10ஆம் ஆண்டில் 49.7 பில்லியன் டாலர் அள‌வி‌ற்கு வருவாய் எ‌‌தி‌ர்‌பா‌ர்‌‌க்க‌ப்படுவதாகவு‌ம் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது :

இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மூலம் 2009-10ஆ‌ம் ஆண்டில் 49.7 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2004-05 முதல் 2008-09 வரையிலான ஐந்தாண்டு கால ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் 29 சதவீத கூடுதல் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட கடும் பொருளாதார பின்னடைவு காரணமாக இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் பெரும் சரிவு காணப்பட்டது.

எனினும், தற்போது உலகளாவிய பொருளாதார நிலையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவதால் வளர்ச்சி விகிதம் 2010-11 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுகளில் ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எ‌ன்று அமைச்சர் சச்சின் பைலட் கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக