திங்கள், 1 மார்ச், 2010

பிராவிடண்ட் பண்ட் வட்டி 8.5 விழுக்காடு வழங்க பரிந்துரை.

பிராவிடண்ட் பண்ட் என்று அழைக்கப்படும் ஓய்வுகால நிதியின் உள்ளவர்களுக்கு, வரும் நிதி ஆண்டிற்கு 8.5 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.

பி.எஃப் என்று சுருக்கமாக அழைக்கபடும் ஓய்வுகால நிதிக்கு, கடந்த ஐந்து வருடங்களாக 8.5 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது. இதையே வரும் நிதி ஆண்டிலும் வழங்க ஓய்வுகால நிதியை நிர்வாகிக்கும் குழு பரிந்துரைத் துரைத்துள்ளது.

பி.எஃப் நிறுவனத்தில் சேரும் பணத்தை முதலீடு செய்வதற்கும், எந்தெந்த வகையில் முதலீடு செய்யலாம், இதில் இருந்து கிடைக்கும் வருவாயை, பி.எஃப் சந்தாதாரர்களுக்கு எவ்வாறு பிரித்து கொடுப்பது என்று ஆலோசனை கூற, பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி பரிந்துரைக்கிறது.

இதன் பரிந்துரை சென்ட்ரல் போர்ட் ஆப் டிரஸ்டி முன் வைக்கப்படும். இதில் பி.எஃப் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கமிட்டியின் கூட்டம் சென்ற வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் வரும் (2010-11) நிதி ஆண்டுக்கு 8.5 விழுக்காடு வட்டி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதனால் வட்டி வழங்கியது போக, பி.எஃப் நிறுவனம் வசம் ரூ.15 கோடியே 26 லட்சம் இருப்பில் இருக்கும்.

இதில் இடம் பெற்றுள்ள தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் 9.5 விழுக்காடு வட்டி வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஹிந்த் மஸ்தூர் சபா (ஹெச்.எம்.எஸ்) செயலாளர் ஏ.டி.நாக்பால், பாரதிய மஸ்தூர் சபா செயலாளர் (பி.எம்.எஸ்) பி.என். ராய் ஆகியோர் 8.5 விழுக்காடு வட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பி.எஃப் அமைப்பில் சேர்ந்துள்ள பணத்தை முதலீடு செய்துள்ள வகையில் இருந்து கிடைக்கும் வருவாயை மதிப்பிட்ட பிறகே, எவ்வளவு வட்டி வழங்குவது என முடிவு செய்யலாம்.

பிஃஎப் கணக்கில் உள்ள ரூ. 2 லட்சத்து 57 லட்சம் கோடி முதலீடு செய்த வகையில் இருந்து கிடைக்கும் என மதிப்பிட்ட வருவாயையும், உண்மையாக கிடைத்த வருவாய் பற்றிய அறிக்கையை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியாதாக தெரிகிறது.

பி.எஃப் அமைப்பில் 4 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். 2005-06 நிதி ஆண்டில் இருந்து 8.5 விழுக்காடு வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

இது முதலீடு செய்துள்ளவைகளில் இருந்து, வரும் நிதி ஆண்டில் ரூ.15,036 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பி.எஃப் சந்தாதாரர்களுக்கு 8.5 விழுக்காடு வட்டி வழங்கினால், இதனிடம் உபரியாக ரூ.15.26 கோடி இருக்கும்.

இவர்களுக்கு 9 விழுக்காடு வட்டி வழங்கினால், ரூ.868 கோடிக்கும் மேல் பற்றாக்குறை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக