வங்கிகள் ஒவ்வொரு பிரிவு வாரியாக வாராக்கடன் (Non-Perfoming Asset) பட்டியலை வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அடுத்த நிதி ஆண்டிலிருந்து ( 2009-10) செயல்படுத்த வேண்டும். இத்துடன் வங்கிகள் சிறப்பு கடன் திட்டங்களுக்கு (Special Purpose Vehile) கடன் அளித்திருந்தால், அந்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இந்த உத்தரவு வங்கிகளின் செயல்பாடு வெளிப்படையானதாக அமையும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் திரட்டியுள்ள வைப்பு நிதி, சேமிப்பு, வழங்கியுள்ள கடன் விபரங்களை பிரிவு வாரியாகவும், நிலுவையில் உள்ள வாராக் கடன் விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக