வியாழன், 4 மார்ச், 2010
மொபைல்போன்கள், வாட்ச், பொம்மைகள் விலைகள் குறைகிறது.
மத்திய பொது பட்ஜெட்டில் மொபைல்போன்கள், வாட்ச், பொம்மைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த 2010-11 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மொபைல்போன்கள், வாட்ச், பொம்மைகள், ஆயத்த ஆடைகள், பொம்மை பலூன்கள் மற்றும் வாட்டர் பில்டர்கள், மைரோவேவ் ஓவன்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ உபகரணங்கள், செட் டாப் பாக்சஸ்கள், சிடி,புத்தகங்கள் மீதான வரிகளும் குறைக்கப்படுவதாக பிரணாப் தெரிவித்தார்.
மைரோவேவ் ஓவன்கள் தயாரிப்பதற்கான முக்கிய பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.
மொபைல்போன்கள், வாட்ச்கள், ஆயத்த ஆடைகள் போன்ற சில்லறை விற்பனைக்காக முன்கூட்டியே அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட பொருட்கள் மீதான சிறப்பு கூடுதல் வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
அதேப்போன்று பொம்மை பலூன்கள் மீதான மத்திய கலால் வரி முற்றிலும் நீக்கப்படுகிறது.
வீட்டு உபயோக வாட்டர் பில்டர்கள் மீதான மத்திய கலால் வரி 4 % ஆக குறைக்கப்படுகிறது.மேலும் விளையாட்டு பொருட்கள் தயாரிப்புக்கான பொருட்கள் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுவதாகவும் பிரணாப் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக