ஞாயிறு, 21 மார்ச், 2010

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி! இ‌ந்‌தியா பு‌திய சாதனை!


இலக்கைத் தேடி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதையடுத்து, சூப்பர்சானிக் ஏவுகணை தொழில் நுட்பத்தில், இலக்கைத் தேடி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை கொண்ட ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.

‌வ‌ங்க‌க் கட‌‌ல் ஒரிசா கடற்பகுதியில் இருந்து இன்று காலை 11.30 மணியளவில், ஐ.என்.எஸ். ரன்வீர் போர்க் கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவக்கூடிய பிரமோஸ் ரக ஏவுகணை செலுத்தப்பட்டது.

இவ்வாறு செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வங்கக் கடல் பகுதியில் 290 கி.மீ. தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலக்கைத் தேடிப் பிடித்து வெற்றிகரமாக அழித்தது.

இதுகுறித்து பேசிய பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் ஏ. சிவதானு‌ப் பிள்ளை, இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு, இலக்கைத் தேடி அழிக்கும் சூப்பர்சானிக் ஏவுகணை கொண்ட முதல் மற்றும் ஒரே நாடு இந்தியாதான் என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர், வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்த பிரமோஸ் விஞ்ஞானிகளுக்கும், கப்பற்படையினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக