மக்கள் தொகையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள சீன நாட்டில் மணமகன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அங்குள்ள சில மாகாணங்களில் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
சீனாவின் குவாங்க்டோக் மாகாணத்தில் உள்ள குவாங்க்சோவ் நகரில் இளம் பெண்களுக்கு திருமணம் ஆவது தாமதமாகிக் கொண்டே போகிறதாம். மாப்பிள்ளை பார்த்து வெறுத்துப் போனற சில பெண்களின் பெற்றோர், என்ன செய்வீர்களோ.. எப்படியாவது உனக்கு பொருத்தமான துணையை தேடிக் கொள். உடனடியாக திருமணத்தை முடித்தாக வேண்டும் என்று தங்களது பெண்களிடம் கூறி விட்டார்களாம்.
பெற்றோரின் இந்த நிர்ப்பந்தம் காரணமாக 4 நாட்களுக்கு முன்பு 8 இளம் பெண்கள் நடுத்தெருவில் இறங்கி நூதனமான முறையில் மணமகன் வேட்டையில் இறங்கினார்கள். முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டு ஆடிப்பாடியதுடன், `இளைஞர்களே எங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். எங்கள் அம்மாக்கள் எங்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள்' என்று எழுதப்பட்ட அட்டைகளையும் வைத்திருந்தனர்.
இது மட்டுமல்ல, தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகளையும் வினியோகித்தனர்.
இவர்கள், கோமாளி அழகிகள் என்ற அடைமொழியை தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்டு உள்ளனர்.
என்ன கொடுமை இது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக