வியாழன், 11 மார்ச், 2010
பாங்க் ஆப் இந்தியா வட்டி அதிகரிப்பு!
அரசு வங்கியான பாங்க் ஆப் இந்தியா, வைப்பு நிதிக்கான வட்டியை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது.
முன்பு 9 மாதத்தில் இருந்து 364 நாட்கள் வரையிலான வைப்பு நிதிக்கு 8 விழுக்காடு வட்டி வழங்கியது. இது தற்போது 6.5 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடமும், அதற்கு அதிகமான காலத்திற்கான வைப்பு நிதிக்கு வட்டி 6.5 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி ஆகியன சென்ற மாதம் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியது. இதை தொடர்ந்து அரசு வங்கியான பாங்க் ஆப் இந்தியாவும் அதிகரித்துள்ளது. இதில் இருந்து இனி கடன் மீதான வட்டி அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக