புதன், 17 மார்ச், 2010
புகைப்பதால் நன்மை உண்டாம்!
புகைப் பிடித்தால் புற்று நோய் வரும், உடல்நிலை பாதிக்கும், ஆயுட்காலம் குறையும் என்று எத்தனையோ விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியாகிவிட்டது. ஆனால் தற்போது புகைப்பதால் நன்மை உண்டு என்று கூறுகிறோமே என நம்மை சந்தேகிக்க வேண்டாம்.
அதாவது, புகைப் பிடிப்பதை நிறுத்தினால் ஓராண்டுக்குப் பிறகு, இதயத் தமணிகள் வலிமையாகி இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நம்மிடம் விளக்குகிறார் நியூயார்க்கில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழக இதயவியல் தலைவர் ஜேம்ஸ் ஸ்டீன், ஒருவர் தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருப்பதால் அவரது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதில் எந்த அளவிற்கும் சந்தேகம் இல்லை. ஆனால், அதே சமயம், புகைப் பிடிப்பதை நிறுத்தினால் ஒருவரது ஆரோக்கியம் வேகமாக அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதாவது, இதயத்திற்குச் செல்லும் ரத்தத் தமணிகள் சிறப்பாக செயல்படும். அதனால் இதயம் வலிமையடைந்து நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
புகைப்பதை நிறுத்துவதால் எடை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. எடை அதிகரிப்பு தற்காலிகமானதுதான். சில நாட்களில் அது தானாகவே சரியாகிவிடும். அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.
எனவே, புகைக்காமல் இருப்பவர்களை விட புகைத்துவிட்டு நிறுத்திவிட்டால் அவர்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பது புகைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல விஷயம்தானே..
சரி எப்போதிலிருந்து புகைப்பதை நிறுத்துவது என்பதை உடனடியாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக