திங்கள், 8 மார்ச், 2010
நாடு முழுவதும் குடியிருப்பு-வணிக வளாகம் கட்ட திட்டம்: எல்.ஐ.சி
இந்திய ஆயுள் காப்பீடு கழகம் ( எல்.ஐ.சி ), நாடு முழுவதும் குடியிருப்பு, வணிக வளாகங்களை கட்டும் என்று சேர்மன் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்தியாவில் ரயில்வே துறைக்கு அடுத்த படியாக, எல்.ஐ.சி யிடம் அதிக அளவு ரியல் எஸ்டேட் ( காலி மனை, கட்டிடம் போன்றவை) சொத்துக்கள் உள்ளன. அத்துடன் அதிக அளவு முதலீடு செய்யும் நிறுவனமாகவும் உள்ளது. ரியல்எஸ்டேட் துறையில் இருந்து ரூ.200 கோடி வருவாய் வருகிறது. இதை முன்னூறு கோடியாக அதிகரிக்க உள்ளோம்.
இந்த நிதி ஆண்டில் பிரிமியம் (காப்பீடு கட்டணம்) வருவாயாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வந்துள்ளது. இதை அடுத்த நிதி ஆண்டில் மேலும் 18 முதல் 19 விழுக்காடு வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம். இதில் 15 விழுக்காடு அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம் என்று டி.எஸ்.விஜயன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக