வியாழன், 18 மார்ச், 2010
தூக்கத்திற்கு உதவும் மெலட்டோனின்!
நமது உடலில் பல்வேறு விதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலைகளைச் செய்து வருகின்றன.
இதில் நமது உடலில் சுரக்கும் மெலட்டோனின் எனப்படும் ஹார்மோன்தான் நமது தூக்கத்திற்குக் காரணமாகிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது நமக்கு தூக்கம் வருகிறது.
மெலட்டோன் சுரப்பு குறையும் போது தூக்கம் வராது. இந்த ஹார்மோனுக்கும், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கும் அதிக தொடர்பு உள்ளது.
அதாவது, நமது உடலைச் சுற்றி வெளிச்சம் அதிகமாக இருக்கும் போது இந்த ஹார்மோன் சுரப்பதில்லை. இருட்டான பகுதிக்குள் இருக்கும் போது ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது.
சிலருக்கு ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவே அதிகமாக தூங்கி வழிவதும், தூக்கம் வராமல் புரளுவதும் ஏற்படுகிறது.
தூக்கம் வருவதற்கு நாமும் சில வழிமுறைகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக