திங்கள், 15 மார்ச், 2010

ஹைதராபாத்தில் அலுவலகம் திறக்கும் ஃபேஸ்புக்!


ஹைதராபாத்: உலகின் நம்பர் ஒன் சமூக இணைப்புத் தளம் என்ற பெருமைக்குரிய ஃபேஸ்புக், இப்போது இந்தியாவிலும் தனது அலுவலகத்தைத் தொடங்குகிறது.

ஹைதராபாதில் விரைவில் அலுவலகம் திறக்கிறது இந்த நிறுவனம். இதன் மூலம் இந்தியாவில் தனது நெட்வொர்க்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, விளம்பர வருவாயைப் பெருக்குவது மற்றும் தள மேம்பாட்டுக்கான பணிகளை இந்தியாவிலும் உலகளவிலும் பெருக்கவிருப்பதாக அறிவித்துள்ளது ஃபேஸ்புக்.

தற்போது கலிபோர்னியாவில் பாலோ ஆல்டோ, அயர்லாந்தில் டப்ளின், டெக்ஸாஸின் ஆஸ்டின் ஆகிய இடங்களில் ஃபேஸ்புக் அலுவலகங்கள் உள்ளன. இவற்றுக்கு அடுத்து இந்தியாவில்தான் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து ஃபேஸ்புக்கின் குளோபல் ஆபரேஷன் இயக்குநர் டான் பௌல் கூறுகையில், இந்தியாவில் அதிகம் பேர் ஃபேஸ்புக் பயனாளர்களாக உள்ளனர். உள்ளூர் பிரச்சனை முதல் நாட்டுப் பிரச்சனை வரை விவாதிக்கின்றனர். இங்கு அலுவலகம் திறப்பதன் மூலம் ஃபேஸ்புக்கின் வீச்சும், பார்வையாளர் எண்ணிக்கையும் வருவாயும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக