சென்னை: பிளஸ் ஒன் படிப்பில் பெயிலான மாணவனை பிளஸ்டூவுக்கு அனுப்ப சென்னை [^] உயர்நீதிமன்றம் [^] [^] உத்தரவிட்டது.
காரைக்காலைச் சேர்ந்த கலைராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
எனது மகன் குரு அரவிந்த் காரைக்காலில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு +1 படித்தான். தேர்ச்சி பட்டியலில் அவன் பெயர் இல்லை. அவன் தேர்வில் தோல்வி அடைந்ததாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் மற்ற மாணவர்களை +2 விற்கு அனுப்பினர். இதனால் என் மகன் மனம் உடைந்து போனான். அவனுக்கு பள்ளிக்குச் செல்வதில் ஆர்வம் அதிகம் உள்ளது. அவனின் கடந்த ஆண்டு வருகைப் பதிவின் சதவிகிதம் 95 ஆகும். எனவே, கல்வி [^]யில் ஆர்வமுள்ள அவனை +2-விற்கு அனுப்பினால் அவன் தேர்ச்சி பெற நாங்கள் அவனுக்கு ஊக்கம் அளிப்போம். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் ஒரு மாணவனை தயார் செய்வது என்பது ஒரு நாட்டை தயார் செய்வது போலாகும். ஆகையால், கல்வியில் ஆர்வமுள்ள இந்த மாணவனுக்கு சலுகை அளித்து +2 வகுப்புக்கு இந்த கல்வி ஆண்டிலேயே அனுப்ப வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் தான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் (தோல்வி) ஆக்கக் கூடாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக