சனி, 7 ஆகஸ்ட், 2010

உலக தரத்துக்கு மாறப் போகும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்!


டெல்லி: சென்னை [^] சென்ட்ரல் உள்ளிட்ட 6 முக்கிய ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற மத்திய அரசு சார்பில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவையில் ரயில்வே துறை இணையமைச்சர் கே.எச்.முனியப்பா வியாழனன்று அளித்த எழுத்து மூலமான பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அவர் பேசுகையில், "நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான செகந்திராபாத், ஹவுரா, சியால்டா, கொல்கத்தா, சென்னை சென்ட்ரல் மற்றும் பிகார் ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படவுள்ளன.

புது டெல்லி [^], மும்பை [^] சத்ரபதி சிவாஜி, பாட்னா ரயில் நிலையங்ளை நவீனப்படுத்துவதற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் பணி பொதுத்துறை மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தப் பணிகள், ரயில் சேவைகளை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட உள்ளதால் பணிகளை முடிக்க 5 முதல் 6 வருடங்கள் ஆகும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக