ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
7ஆம் அறிவு - ஸ்ருதி விளக்கம்!
கஜினி படத்தை கிறிஸ்டோபர் நோலனின் மெமண்டோ படத்தின் பாதிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்தார். அதற்காக அவர் எடுக்கும் எல்லாப் படங்களும் கிறிஸ்டோபர் நோலனின் படங்களின் காப்பி என்றால் எப்படி? ஒரு கிரியேட்டராக முருகதாஸுக்கு கோபம் வருவது நியாயம்தானே?
நோலனின் இன்செப்ஷன் படம்தான் 7ஆம் அறிவு என ஆறறிவு மனிதன் ஒருவன் கொளுத்திப்போட முருகதாஸ் கொதித்துப் போனதும், முட்டாள்தனமா இருக்கு என அந்த செய்தியை அவர் கடிந்து கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் இன்செப்ஷன் நெருப்பு அணையாமல்தான் இருக்கிறது போலும். இல்லையென்றால் படத்தின் நாயகி தன் பங்குக்கு விளக்கம் அளிப்பாரா?
7ஆம் அறிவில் சூர்யா ஹீரோ. ஹீரோயின் ஸ்ருதி. 7ஆம் அறிவு படத்தின் கதை என்ன என்று தெரிந்தவர் என்பதால் ஸ்ருதி விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது 7ஆம் அறிவுக்கும் இன்செப்ஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வதந்தி ப்ரியர்கள் இனியாவது இன்செப்ஷன் பெயரை உச்சரித்து முருகதாஸின் பிபி-யை எகிற வைக்காமல் இருக்கக்கடவதாக.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக