வியாழன், 5 ஆகஸ்ட், 2010

தீபாவளி ரயில்கள்-சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்: 17 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!


சென்னை: தீபாவளிப் பண்டிக்கைக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் தீபாவளிக்கு ஊருக்குப் போக திட்டமிட்டிருந்த பயணிகள் பல்லாயிரக்கணக்கானோர் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நவம்பர் 5ம் தேதி தீபாவளிப் பண்டிகை வருகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் [^] குடும்பத்தோடு ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கான ரயில்வே டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட் முடிந்து விட்ட நிலையில் 3ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தி.நகர், திருமயிலை, தாம்பரம், பெசன்ட் நகர் உட்பட அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பயணிகள் அதிகாலை முதலே டிக்கெட் கவுண்டர்கள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

காலை 8 மணிக்கு கவுண்டர்கள் திறந்ததும் பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆனால், முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே அனைத்து ரயில்களுக்கும் 2ம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய டிக்கெட்டுகளும், 3ம் வகுப்பு ஏசி டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

இதே போல கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 5 நிமிடங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்ததோடு, காத்திருப்போர் பட்டியல் 299ஆக இருந்தது. மேலும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான டிக்கெட்டுகளும் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்ததோடு, காத்திருப்போர் பட்டியல் 298ஆக இருந்தது.

முத்துநகர் எக்ஸ்பிரசில் 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் காத்திருப்போர் பட்டியல் 300ஆகவும், நெல்லை [^] எக்ஸ்பிரசில் 5 நிமிடத்தில் டிக்கெட்கள் விற்றுத்தீ ர்ந்ததோடு, காத்திருப்போர் பட்டியல் 301ஆக இருந்தது.

இதே போல் ராமேஸ்வரம் [^], கன்னியாகுமரி [^], பாண்டியன், வைகை, அனந்தபுரி, பொதிகை ஆகிய ரெயில்களிலும் டிக்கெட்டுகள் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தது. இதனால் முன்பதிவு மையத்தில் பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.

இந் நிலையில் தீபாவளியையொட்டி 17 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக