வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மருத்துவப் பணி சாராத நிபுணர்களை உருவாக்கும் மருத்துவப் பட்டப்படிப்பு!


மருத்துவத் துறையின் குறிப்பாக மருத்துவமனைகளில் பல்வேறு நிபுண‌ர்களின் தேவை அதிகரித்திருப்பதையொட்டி மியாட் அகாடமி ஆஃப் அலைடு ஹெல்த் சயன்ஸ் மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து 'திறன்கள் அடிப்படையிலான' மருத்துவ பி.எஸ்.சி. பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து மியாட் மருத்துவமனை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு அறுவை சிசிச்சைகள், நோய் முன் கணிப்புகள் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரமிதமாக ஏற்பட்டுள்ளது.

இதனை ஒரு அறுவை சிகிச்சையிலோ அல்லது பிற மருத்துவ சிகிச்சையிலோ பயன்படுத்தும் போது அதனை மட்டுமே அறிந்த தொழில்நுட்ப நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட சிகிச்சையின் போது பல்வேறு உபபிரிவுகளில் தொழில் சார்ந்த நிபுணர்களையே மருத்துவமனைகளும் மருத்துவர்களும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இதனால் கால தாமதமும் ஏற்படுகிறது.

இது போன்ற துறைகளில் ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுகளில் மட்டுமே பட்டப்படிப்பு படித்தவர்கள் இருந்தால் போதுமானது என்ற யோசனையின் அடிப்படையில் எழுந்ததே இந்த மியாட்-எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. கூட்டாண்மை.

உதாரணத்திற்குக் கூறவேண்டுமென்றால் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் உணர்வகற்றும் மருந்து. இதில் அறுவை சிகிச்சை முழுதும் அனஸ்தீஷியா நிபுணர்கள் உடனிருப்பது அவசியமாகிறது. இது பல வேளைகளில் கடினமாக உள்ளது.

இப்போது உணர்வகற்றுதல் மருத்துவத்தில் மட்டும் பயிற்சி பெற்ற நிபுணர்களை உருவாக்கினால் அது சௌகரியமானது என்று கருதப்படுகிறது!

"அதேபோல் இதயத்தமனி அறுவை சிகிச்சையில் ஈடுபடும் ஒரு அறுவை நிபுணர் அனாஸ்டோமேசிஸ் -க்காக நாளங்களை பிரித்து வைப்பதில் நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. மருத்துவ உதவியாளர் போன்றதொரு பயிற்சி பெற்ற மருத்துவம் சாராத நிபுணர்கள் இச்செயல் முறையை மேற்கொள்ளலாம்."

என்று மியாட்-எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. கூட்டாண்மை நம்புகிறது.

"இந்த சிறப்புத் தேவைப்பாடுகளை ஈடேற்றும் வகையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் சாராத படிப்புகள் மிக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் சிறப்பான மனப்பாங்கு கொண்ட மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களைக் கற்று மருத்துவர்களுக்கு உதவுவதோடு நோய்களைக் குணப்படுத்தவும் உதவலாம்." என்று அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்பட்டப் படிப்புகள் 3 ஆண்டுகள் கால அளவு கொண்டதாகும். முதல் ஆண்டில் மனித உடல் மற்றும் உடல் இயக்கவியல் குறித்த அடிப்படைத் தகவல்கள், உடலிலுள்ள திசுக்கள் உறுப்புகள் நோயிற்கு காட்டும் எதிர்வினை குறித்த கொள்கைகளுடன் காலை நேர பொதுப்பாடங்களாக பயிற்றுவிக்கப்படும்.

மதியம் மாணவர்கள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பிரிவுகளில் நேரடி அனுபவம் பாடமாக வழங்கப்படும். பொருத்துமானதொரு தேர்வுக்கு பிறகு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் பி.எஸ்.சி. பட்டம் (அலைடு ஹெல்த் சயன்ஸ் என்று பெயரிட்ட) வழங்கும்.

அந்தப் பட்டப்படிப்புகளின் சில உதாரணங்கள் இதோ:

1. பி.எஸ்.சி. ஆக்சிடெண்ட் அண்டு எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி
2. பி.எஸ்.சி. கார்டியாக் பல்மனரி கேர் டெக்னாலஜி
3. பி.எஸ்.சி. கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி
4. பி.எஸ்.சி. ஆபரேஷன் தியேட்டர் & அனஸ்தீஷியா டெக்னாலஜி
5. பி.எஸ்.சி. பிசிசியன் அசிஸ்டண்ட்
6. பி.எஸ்.சி. ரேடியாலஜி இமேஜிங் டெக்னாலஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக