சனி, 14 ஆகஸ்ட், 2010

கூகுள் மீது வழக்கு தொடர்ந்தது ஆரக்கிள்!


நியூயார்க்: ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தில், காப்புரிமை மீறல் தொடர்பாக பிரபல கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது ஆரக்கிள் நிறுவனம்.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த வியாழனன்று தொடரப்பட்ட இந்த வழக்கில், "கூகுள் நிறுவனம் வேண்டுமென்றே, மீண்டும் மீண்டும் ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா அடிப்படையிலான அறிவுசார் சொத்துரிமையை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்திடமிருந்து 5.6 பில்லியன் டாலர் கொடுத்து ஜாவா மென்பொருள் உரிமையைப் பெற்றது ஆரக்கிள். இணையதளம் சார்ந்த பல வசதிகளுக்கு ஜாவா தொழில்நுட்பம் அவசியம். ஆனால் கூகுள் நிறுவனம் எந்த வித காப்புரிமைத் தொகையும் தராமல் இந்த மொன்பொருள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளில் இப்போது ஆரக்கிள் இறங்கியுள்ளது.
Read: In English
"டிவிடிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் என பல மின்னணு சாதனங்களிலும் இன்றைக்கு ஜாவா பயன்பாடு அவசியமாகிறது. எனவே ஜாவா இன்றைக்கு முக்கிய சொத்தாகத் திகழ்கிறது. அதன் உரிமையை உரிய அனுமதியின்று யாரும் அனுபவிக்க விடமாட்டோம்" என்கிறார் ஆரக்கிள் நிறுவன சிஇஓ லாரி எல்லிசன்.

கூகுளின் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் ஜாவா தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாகும். நாளொன்றுக்கு உலகம் முழுக்க 2 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக