வியாழன், 12 ஆகஸ்ட், 2010
ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கியது!
புனித ரமலான் மாதத்தையொட்டி இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கியுள்ளது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளின் ஒன்றான நோன்பு புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் கடைபிடிக்கப்படுவது வழக்கமாகும்.
அதிகாலை தொழுகை நேரம் துவங்கி சூரியன் மறையும் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். விண்ணில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் நோன்பு துவங்கம்.
நேற்று மாலை தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறை தெரிந்ததாக இஸ்லாமிய மதத் தலைவர்கள் தெரிவித்தனர்.
ரமலான் மாதத்தை இஸ்லாமியர்கள் சிறப்பு மாதமாக கருதுகிறார்கள். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது.
நோன்பு காலங்களில் பின்னிரவில் உண்ணப்படும் உணவை இஸ்லாமியர்கள் சஹர் உணவு என்று அழைக்கிறார்கள். நோன்பு பெருநாளான ரம்ஜான் தினத்தில் மித்ரா என்னும் தர்மத்தை இஸ்லாமியர்கள் தங்கள் கடமையாக கருதுகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக