சனி, 14 ஆகஸ்ட், 2010
பாகிஸ்தானுக்கு இந்தியா ரூ. 23 கோடி வெள்ள நிவாரண நிதி!
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 23 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சமீபத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு சுமார் 1,700 பேர் பலியாகினர்; ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்து குரேஷியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள இந்தியா சார்பில் ரூ. 23 கோடி (5 மில்லியன் டாலர்) வழங்குவதாக தெரிவித்தார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள், அந்த துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கான இந்தியாவின் ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாக குரேஷியிடம் கிருஷ்ணா குறிப்பிட்டதாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக