திங்கள், 16 ஆகஸ்ட், 2010
ரூபாய் குறியீட்டுடன் கூடிய கீபோர்ட்-வெளியிட்டது டிவிஎஸ்!
சென்னை புதிய ரூபாய் குறியீட்டுடன் கூடிய கம்ப்யூட்டர் கீபோர்டை வெளியிட்டு புதிய சாதனை படைத்துள்ளது டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
சமீபத்தில்தான் இந்த புதிய ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ரூபாய் குறியீட்டுடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்தியுள்ள முதல் நிறுவனம் டிவிஎஸ்தான்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டிவிஎஸ் கோல்ட் பாரத் கீபோர்ட் (சுருக்கமாக டிவிஎஸ் - இ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கீபோர்டின் உதவி கொண்டு எளிதாக புதிய ரூபாய் குறியீடை எளிதாக இடம்பெறச் செய்யலாம்.
490மிமீ நீளம், 180மிமீ அகலம் மற்றும் 20மிமீ உயரம் கொண்ட இந்த புதிய கீபோர்டு, யுஎஸ்பி மற்றும் பிஎஸ்2 சப்போர்டை பெறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த புதிய கீபோர்டு தங்குதடையின்றி இயங்கும்.
இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட டிவிஎஸ் - இ கீபோர்டின் விலை ரூ. 1,495 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், புதிய ரூபாய் குறியீடு கொண்டுள்ள கீபோர்டை வடிவமைத்த முதல் மற்றும் இந்தி [^]யாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கீபோர்டின் பிற சிறப்பம்சங்கள்:
- நீண்ட காலத்திற்கு உழைக்கும் வகையிலான பட்டன்கள். அதாவது 5 கோடி கீஸ்டிரோக்குகள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியவை.
- டிவிஎஸ் கோல்ட் பைலிங்குவல் கீபோர்டுகள் இந்திய மொழிகளான தமிழ் [^], தெலுங்கு [^], இந்தி, மலையாளம் [^], கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமிஸ், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளையும் சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக