புதன், 4 ஆகஸ்ட், 2010
ஜீன்ஸ் பேன்ட் அணிய தடை!
சென்னை : மாணவர்கள் டி&சர்ட், மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட் அணியக் கூடாது என்று அண்ணா பல்கலைக் கழகம் தடை விதித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளாக கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை பொறியியல் கல்லூரி (எம்ஐடி), அழகப்பா பொறியியல் கல்லூரி, ஆர்க்கிடெக்ட் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வர உள்ளோம்.
மாணவர்கள் டி&சர்ட்டும், மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட் அணிந்தும் கல்லூரிக்கு வரக் கூடாது. படிப்பை முடித்து, வேலை கிடைத்து வேலைக்கு சேரக்கூடும். அப்போது வேலை தரும் நிறுவனங்கள் ஆண்களை டை கட்ட வேண்டும், கோட் போட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதேபோல, மாணவிகளும் கோட் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், இப்போதே அவர்கள் அதற்கேற்ப உடை அணிய பழக வேண்டும்.
இதுதவிர, கல்லூரியில் ஆய்வுக் கூடங்களுக்கு செல்லும்போது, காக்கி நிற சீருடைகளை அணிந்து செல்ல வேண்டும். மாணவிகள் காக்கியில் ஓவர்கோட் அணிய வேண்டும். இந்த ஆடை கட்டுப்பாடு உடனடியாக கொண்டு வரப்படும். அதேபோல, செல்போனுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு துணைவேந்தர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக