சனி, 7 ஆகஸ்ட், 2010
ஜாமீன் பெற ரூ. 200 கோடி டெபாசிட் செய்ய ஸ்டெர்லைட் துணைத் தலைவருக்கு உத்தரவு!
தூத்துக்குடி: தூத்துக்குடி [^] ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரியல் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சிக்கியுள்ள அந் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் [^] ரூ 200 கோடி டெபாசிட் செய்தால் ஜாமீன் கிடைக்கும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூலை மாதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தில் தாமிரத் தாது இறக்குமதி செய்ததில் ரூ 750 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக அந் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்தனர்.
வரதராஜன் தம்மை ஜாமீனில் விடுவிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரித்த நீதிபதி கஸ்டம்ஸ் சட்டத்தின்படி வரதராஜன் ரூ 313 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே, வரி ஏய்ப்பு செய்த தொகையை செலுத்தும் பட்சத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கலாம்.
மனுதாரர் 200 கோடி ரூபாயை நெல்லை கஸ்டம்ஸ் கமிஷனர் அலுவலகத்தில் டெபாசிட்டாக செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் பட்சத்தில் ஜாமீன் வழங்கப்படும். தேவைப்படும் போது மனுதாரர் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
மோசடி வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ரூ 200 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் [^] உத்தரவிட்டிருப்பது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக