ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் இரயில்களின் நேரம்!
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் இரயில்களின் நேரத்தை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி (2675) சென்னை - கோயம்புத்தூர் கோவை விரைவு இரயில் காலை 6.15 மணிக்கும், (6057) சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு இரயில் காலை 6.25 மணிக்கும், (2639) சென்னை - பெங்களூரு பிருந்தாவன் விரைவு இரயில் காலை 7.15 மணிக்கும், (2842) சென்னை - ஹவுரா கொரமண்டல் இரயில் காலை 8.45 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.
(6627) சென்னை - மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் இரயில் காலை 11.30 மணிக்கும், (1042) சென்னை - மும்பை சி.எஸ்.டி விரைவு இரயில் காலை 11.55 மணிக்கும், (2609) சென்னை - பெங்களூரு விரைவு இரயில் பகல் 1.35 மணிக்கும், (6053) சென்னை - திருப்பதி விரைவு இரயில் பகல் 1.50 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(2679) சென்னை - கோயம்புத்தூர் இன்டர்சிட்டி விரைவு இரயில் பிற்பகல் 2.30 மணிக்கும், (2695) சென்னை - திருவனந்தபுரம் விரைவு இரயில் மாலை 3.25 மணிக்கும், (2607) சென்னை - பெங்களூரு லால்பாக் விரைவு இரயில் மாலை 3.35 மணிக்கும், (6203) சென்னை - திருப்பதி கருடாத்திரி விரைவு இரயில் மாலை 4.35 மணிக்கும் புறப்படும்.
(6089) சென்னை - திருப்பத்தூர் ஏலகிரி விரைவு இரயில் மாலை 5.55 மணிக்கும், (2615) சென்னை - புதுடெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு இரயில் இரவு 7.15 மணிக்கும், (2671) சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு இரயில் இரவு 9 மணிக்கும், (2601) சென்னை - மங்களூர் மெயில் இரவு 8.25 மணிக்கும் புறப்படும்.
(6041) சென்னை - ஆலப்புழை விரைவு இரயில் இரவு 9.15 மணிக்கும், (6222) சென்னை - மைசூர் காவேரி விரைவு இரயில் இரவு 9.30 மணிக்கும், (2621) சென்னை - புதுடெல்லி தமிழ்நாடு விரைவு இரயில் இரவு 10 மணிக்கும், (2681) சென்னை - கோயம்புத்தூர் சேரன் விரைவு இரயில் இரவு 10.10 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.
(6669) சென்னை - ஈரோடு ஏற்காடு விரைவு இரயில் இரவு 10.40 மணிக்கும், (1028) சென்னை - மும்பை சி.எஸ்.டி மெயில் இரவு 10.50 மணிக்கும், (2657) சென்னை - பெங்களூரு விரைவு இரயில் இரவு 11.15 மணிக்கும், (2840) சென்னை - ஹவுரா விரைவு இரயில் இரவு 11.40 மணிக்கும், (2691) சென்னை - ஸ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம் (வாராந்திர- வெள்ளிக்கிழமைகளில்) விரைவு இரயில் இரவு 11.30 மணிக்கும் புறப்படும்.
இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் (103) சென்னை - புதுச்சேரி விரைவு பாசஞ்சர் இரயில் காலை 6.35 மணிக்கும், (2164) சென்னை - தாதர் விரைவு இரயில் காலை 6.50 மணிக்கும், (6127) சென்னை - குருவாயூர் விரைவு இரயில் காலை 7.50 மணிக்கும் புறப்படும்.
(6853) சென்னை - திருச்சி விரைவு இரயில் காலை 8.20 மணிக்கும், (2635) சென்னை - மதுரை வைகை விரைவு இரயில் பகல் 12.40 மணிக்கும், (6735) சென்னை - திருச்செந்தூர் (வாராந்திர- வெள்ளி) இரயில் பிற்பகல் 2.40 மணிக்கும், (2605) சென்னை - திருச்சி பல்லவன் விரைவு இரயில் மாலை 3.45 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.
(6713) சென்னை - ராமேஸ்வரம் விரைவு இரயில் மாலை 5 மணிக்கும், (2633) சென்னை - கன்னியாகுமரி விரைவு இரயில் மாலை 5.30 மணிக்கும், 6115 சென்னை - புதுச்சேரி விரைவு இரயில் மாலை 6.10 மணிக்கும், (2667) சென்னை - நாகர்கோவில் (வாராந்திர-வியாழன்) இரயில் மாலை 6.50 மணிக்கும் புறப்படும்.
(6723) சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு இரயில் இரவு 7.15 மணிக்கும், (2693) சென்னை - தூத்துக்குடி முத்துநகர் விரைவு இரயில் இரவு 7.35 மணிக்கும், (2661) சென்னை - செங்கோட்டை விரைவு இரயில் இரவு 8.05 மணிக்கும், (2631) சென்னை - நெல்லை விரைவு இரயில் இரவு 8.50 மணிக்கும், (2637) சென்னை - மதுரை பாண்டியன் விரைவு இரயில் இரவு 9.15 மணிக்கும் புறப்பட்டு செல்லும்.
(6701) சென்னை - ராமேஸ்வரம் விரைவு இரயில் இரவு 9.40 மணிக்கும், (6177) சென்னை - கும்பகோணம் மலைக்கோட்டை இரயில் இரவு 10.30 மணிக்கும், (2793) சென்னை - மதுரை (வாரம் இருமுறை- வெள்ளி,ஞாயிறு) இரவு 10.45 மணிக்கும், 1063 சென்னை - சேலம் விரைவு இரயில் இரவு 11.30 மணிக்கும், (617) சென்னை - நாகூர் விரைவு இரயில் இரவு 11.35 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக