சனி, 14 ஆகஸ்ட், 2010

விசா கட்டண உயர்வு இரு நாட்டு பொருளாதார நலன்களைப் பாதிக்கம்: சிஐஐ!


அமெரிக்காவில் பணியாற்றச் செல்லும் இந்திய தொழில் நெறிஞர்களுக்கு அளிக்கப்படும் ஹெச் 1பி, எல் 1 ஆகிய விசாக்களுக்கான கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியிருப்பது அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பு மனப்பாங்கையே காட்டுகிறது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) குற்றம் சாற்றியுள்ளது.

தங்கள் நாட்டின் பொருளாதார நலன்களை பாதுகாத்திடும் நடவடிக்கைகளை வளரும் நாடுகள் மேற்கொள்ளும் போதெல்லாம் அதனை சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் (Protectionist) என்று கூறிய அமெரிக்கா, இப்போது பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அப்படிப்பட்ட நடவடிக்கையையே எடுத்துள்ளது என்று இ.தொ.கூ. குறை கூறியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பு சட்ட வரைவு என்ற பெயரில் அயல் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு பணி புரிய வருவோருக்கு வழங்கும் விசா கட்டணங்களை 4,000 டாலர்கள் வரை அமெரிக்கா உயர்த்த இந்த சட்ட வரைவு வழிவகுக்கிறது.

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை அந்நாட்டில் தங்கள் வணிக கிளைகளை நிறுவி தொழில் செய்யும் இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் டாலர் கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

இந்த நடவடிக்கை இரு நாடுகளின் பொருளாதார நலன்களுக்குக் கேடானது என்றும் இ.தொ.கூ. கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக