சனி, 14 ஆகஸ்ட், 2010

4 லட்சம் கிராமங்களில் மின்சாரம் இல்லை: எரிசக்தி துறை!


நாட்டில் 4 லட்சம் கிராமங்களில் மின்சார வசதி இல்லை என்று தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு துறைத் தலைவர் ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்தார்.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்துப்பட்டறை நே‌ற்று நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி பேசுகை‌யி‌ல், மின்சாரத்தின் மூலம் ஒரு சில இடங்களில் மட்டும் அனைத்து வசதிகளையும் பெற்றுவிட்டால், மின்சாரத்துக்குப் பிரச்சனையே இல்லை என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் நாட்டில் 4 லட்சம் கிராமங்களில் மின்சாரமே இல்லாத நிலை உள்ளது.

இதற்கு மாற்று எரிசக்தி மிகவும் அவசியம். சாணம், கழிவுகள், காற்று, சூரியசக்தி ஆகியவை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து விழிப்புணர்வு வேண்டும் என்றார் ‌கி‌றி‌ஸ்துதா‌ஸ் கா‌ந்‌தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக