சனி, 7 ஆகஸ்ட், 2010

பைக் உற்பத்தியில் இறங்குகிறது மஹிந்த்ரா!


ஸ்கூட்டர் உற்பத்தி- விற்பனையில் இறங்கி 10 மாத காலத்தில் ஒரு இலட்சம் ஸ்கூட்டர்களை விற்று சாதனை படைத்துள்ள மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம், பைக் உற்பத்தியிலும் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

மும்பையில் பிடிஐ செய்தியாளரிக்கு அளித்துள்ள பேட்டியில் மஹிந்த்ரா நிறுவனம் பைக் உற்பத்தியில் இறங்கப்போவதை அதன் இரு சக்கர வாக உற்பத்திப் பிரிவின் தலைவர் அனுப் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
“18 மாதத்தில் ஒரு இலட்சம் ஸ்கூட்டர்களை விற்பத என்று இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால் அதை 10 மாதங்களில் சாதித்துள்ளோம். இப்போது மோட்டார் சைக்கிள் சந்தையிலும் இறங்குவது என்று தீர்மானித்துள்ளோம். ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் அதே தொழிற்சாலையில்தான் பைக்கையும் தயாரிக்கப் போகிறோம்” என்று மாத்தூர் கூறியுள்ளார்.

இத்தாலியில் உள்ள எஞ்சின் எஞ்சினியரிங் எனும் தொறிற்கூடத்தில் தனது ஸ்கூட்டரை வடிவமைத்த மஹிந்த்ரா நிறுவனம், பைக்கையும் அதே தொழிற்கூடத்தில் வடிவமைக்கவுள்ளது.

பிதாம்பூரிலுள்ள மஹிந்த்ராவின் இரு சக்கர வாகனத் தொழிற்சாலை வருடத்திற்கு 5 முதல் 6 இலட்சம் இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக