வியாழன், 12 ஆகஸ்ட், 2010
தமிழகத்தில் 8 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு!
சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தமிழகத்தில் கடந்த இரு ஆணடுகளாக வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது.
இந்தப் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இதன்மூலம் 12 மாவட்டங்களில் 8 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் வேலு கூறுகையில்,
உணவுத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தியதில் 12 மாவட்டங்களில் 8 லட்சம் ரேஷன்கார்டுகள் போலியான முகவரி கொடுத்து பெற்றிருப்பது கண்டுடிக்கப்பட்டது.
அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர மேலும் 4 மாவட்டங்களில் 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக சந்தேகிக்கிறோம். அவையும் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்படும்.
தகுதியான, உண்மையான குடும்ப அட்டைதாரர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பலவாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் என ஆய்வுகளுக்கு பிறகுதான் போலி கார்டுகள் நீக்கம் செய்யப்படுகின்ற.
அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 15 முதல் 20 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருக்கும் என்று கருதுகிறேன்.
திமுக அரசு 2006ல் பொறுப்பேற்றபோது 1 கோடியே 97 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தன. இதுவரை 16.34 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு இடத்தில் குடியிருப்பதற்கான தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக