வியாழன், 12 ஆகஸ்ட், 2010
''16 வயதில் திருமணம் செய்தாலும் சட்டப்படி செல்லும்''!
''16 வயதில் திருமணம் செய்தாலும் அது சட்டப்படி செல்லும்'' என்று டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த 18 வயது ஜிதேந்திர குமார், 16 வயது பூனம் சர்மா ஆகியோரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அகமத், ஜி.கே.ஜெயின் இருவரும் பாலியல் விவாகம் என அழைக்கப்படும் குழந்தை திருமணம் சட்டப்படி தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் இளம்வயதில் அதாவது, ஆண் 18 வயதிலும், பெண் 16 வயதிலும் திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி தவறு கிடையாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இதில் ஆணோ அல்லது பெண்ணோ எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தால் மட்டுமே இளம் வயது திருமணம் செல்லுபடியாது என்றும் இளம்பெண் திருமணத்தை ரத்து செய்யக் கோரி வேறு யாரும் புகார் செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்தியாவில் திருமண வயது ஆணுக்கு 21 வயது என்றும், பெண்ணுக்கு 18 வயது என்றும் இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக