செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

செலவாளி மிஷல் ஒபாமா-அமெரிக்கர்கள் அதிருப்தி!


வாஷிங்டன்: செலவு செய்வதில் பெரும் சாதனை படைத்து வருகிறார் அமெரிக்க அதிபர் [^] பராக் ஒபாமாவின் மனைவி [^] மிஷல். இதனால் அவரை அந்தக்காலத்து பிரெஞ்சு மகாராணி மேரி ஆன்டாய்னட்டுடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்துள்ளனர் அமெரிக்கர்கள்.

அமெரிக்கப் பொருளாதாரம் [^] அந்தா, இந்தா என்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லாமல் அமெரிக்கர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பெரும் சிக்கலில் இருக்கிறார் அதிபர் ஒபாமா. இந்த நிலையில் மிஷல் ஒபாமா செய்து வரும் ஆடம்பர செலவுகளால் அமெரிக்கர்களிடையே கடும் அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது.

விடுமுறைக்காக ஸ்பெயின் சென்றார் மிஷல். தனியாக இல்லை, 40 தோழர், தோழியருடன். மிஷலின் இந்த பயணத்தால், ஒரு நாளைக்கு குறைந்தது 80 ஆயிரம் டாலர்களாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மிஷலின் இந்த ஆடம்பர செலவுப் பயணத்தால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கர்கள் அவரை விளாசித் தள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு அமெரிக்கர் தனது பிளாக்கில், மிஷலை மேரி ஆன்டாய்னட்டுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

அந்தக்காலத்து பிரெஞ்சு மகாராணிதான் மேரி. மிக மிக ஆடம்பரமானவர். கடைசியில் அவரை தலையைத் துண்டித்துப் படு கொலை செய்தனர். அந்த அளவுக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் ஆஸ்திரியாவில் பிறந்து பிரெஞ்சு மகாராணியான மேரி. அவருடன் தற்போது மிஷலை ஒப்பிட்டுள்ளதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினும் கூட மிஷலை விமர்சித்து பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதற்குக் காரணம், மிஷல் தனது மகள்களுடன் நீச்சலடித்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்குவதற்கு வசதியாக, மார்பெல்லாவில் உள்ள கடற்கரைப் பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த சிறிது நேரம் தடை விதித்தனர். இதுவே ஸ்பெயினும், மிஷலுக்கு எதிராக குரல்கள் கிளம்பக் காரணம்.

மிஷலின் இந்த ஸ்பெயின் பயணத்தால் அதிபர் பராக் ஒபாமா தனது பிறந்த நாளை தனியாக கொண்டாட நேரிட்டதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக