புதன், 18 ஆகஸ்ட், 2010

மலேசிய இந்திய தொழிலதிபர்களுக்கு ஒரு லட்சம் பணியாளர் தேவை!


கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய தொழிலதிபர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மலேசிய - இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கே.கே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.கே.ஈஸ்வரன் மலேசிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

மலேசியாவில் இந்தியர்களால் நடத்தப்படும் உணவகங்கள், கட்டுமான நிறுவனங்கள், நகை ஆபரண மையங்கள், மினி-மார்க்கெட், பல சரக்கு கடைகள் போன்றவற்றுக்கு உள்ளூர் ஆட்களை நியமிக்க இயலவில்லை.

மேலும் லாண்டரி, சிகையலங்கார மையங்கள், ஜவுளி, தையலகங்கள், மலர் அலங்கார நிலையங்கள் போன்றவற்றுக்கும் ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

இவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எல்லாம் வெளிநாட்டு ஆட்களை நியமிக்க வேண்டிய நிலைக்கு தொழிலதிபர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூரிலேயே ஆட்கள் நியமனத்தை உடனடியாக செய்ய முடியாததால், ஆள் பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட தொழில் துறையில் தங்களின் தேவைகள் மற்றும் நுணுக்கங்களை இயல்பாகவே அறிந்துள்ள இந்தியர்கள் இருந்தால், கூடுதல் பலன் அளிக்கும் என இங்குள்ள இந்திய தொழிலதிபர்கள் எண்ணுகின்றனர்.

மலேசியாவில் உள்ள இந்திய உணவகத்திலோ, கைவினைப் பொருட் கூடத்திலோ இந்தியர்கள் பணியாற்ற வேண்டியது தானே இயற்கை? இதுபோல பல்வேறு பிரத்தியேக குறைபாடுகளை இந்திய தொழிலதிபர்கள் எதிர் கொண்டுள்ளனர்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக