வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழகத்தில் 10 நகரங்களில் இரயில்வே மருத்துவமனை.


தமிழகத்தில் செங்கல்பட்டு, ஈரோடு, கரூர், காட்பாடி, கும்பகோணம், நாகர்கோவில், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், விருநகர் ஆகிய இட‌ங்களில் இரயில்வே மருத்துவமனைகளும், உடல் பரிசோதனை மையங்களும் அமைக்கப்படும் என்று இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அவர், மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நாட்டில் மொத்தம் 522 இரயில்வே மருத்துவமனைகளும், உடல் பரிசோதனை மையங்களும், இரயில்வே பணியாளர்கள் மற்றும் அவ‌ரி‌ன் குடும்பத்தினரின் நலனுக்காக அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக