ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

எம்ஆர்எப் கார் ரேஸ் இறுதி சுற்று நடிகர் அஜித் பங்கேற்பு


சென்னை: சர்வதேச கார் மற்றும் பைக் ரேசின் 3வது மற்றும் கடைசி சுற்று போட்டி சென்னையில் இ ன்று நடக்கிறது. எம்ஆர்எப் பார்முலா 1600 கார் ரேசில் முன்னணி வீரர் நரேன் கார்த்திகேயன், நடிகர் அஜித் பங்கேற்கின்றனர்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆதரவில் எம்ஆர்எப் நிறுவனம் நடத்தும் இப்போட்டி (3 சுற்றுகள்), ஸ்ரீபெ ரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை பந்தய வளாகத்தில் நடக்கிறது. பல்வேறு நாடுகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் எம்ஆர்எப் சார்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பார்முலா 1600 சி.சி. கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் ரேசுடன் பைக் ரேசும் (600 சி.சி) நடக்கிறது.

பார்முலா 1600 கார் ரேசில் நடிகர் அஜித் பங்கேற்கிறார். இப்போட்டியில் சர்வதேச வீரர் நரேன் கார்த் திகேயன், அஸ்வின் சுந்தர் உட்பட பலர் களமிறங்குகின்றனர். இந்த போட்டியின் போது கார்த்திக் மற்றும் பாப் ஷாலினி இன்னிசை நிகழ்ச்சி, பழைய அரிய வகை கார்களின் அணி வகுப்பு நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக