புதன், 24 பிப்ரவரி, 2010

ரயில்வேத் திட்டங்களுக்கு ரூ. 41.426 கோடி.


மக்களவையில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சமர்பித்த பட்ஜெட்டில், 2110-11 ஆம் நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.41,426 கோடி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிதி பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் ரூ.15,875 கோடியும, டீசல் வரி மூலம் ரூ.877 கோடியும், ரயில்வேயின் உள்ளாதாரங்கள் மூலம் ரூ.14,523 கோடியும், கூடுதல் பட்ஜெட் ஆதாரங்கள் மூலம் ரூ.10,151 கோடியும் பெறப்படும்.

ரயில்வே வசமுள்ள குறைந்தபட்ச நிதியாதாரங்களக் கொண்டு ரயில் மூலமான இணைப்பை விரிவுபடுத்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஆயிரம் கிமீ புதிய ரயில் பாதை அமைக்கும் இலைக்கை எட்ட, இதற்கான ஒதுக்கீடு ரூ.2,848 கோடியிலிருந்து, ரூ.4411 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக சென்ற ரயில்வே பட்ஜெட்டில் ரூ.923 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இது இந்த பட்ஜெட்டில் ரூ.1302 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் மூலம் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடந்த 2009-10 ஆம் நிதி ஆண்டவிட கூடுதலாக 54 மில்லியன் டன் சேர்க்கப்பட்டு, 944 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேத் துறைக்கு நிலுவையில் உள்ள கடனை திருப்பி செலுத்துவதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாதாரண செலவினங்களுக்காக, ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் திருத்தப்பட்ட எதிர்பார்ப்புகளைவிட ரூ.500 கோடி குறைவாகும் என்று மம்தா பானர்ஜி சமர்ப்பித்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக