ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சேமிப்பு கணக்கு வட்டி தினசரி கணக்கிட வேண்டும்: ரிசர்வ் வங்கி.


வங்கிகளின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு, வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் தினசரி கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்கும். தற்போது வங்கிகள் மாதத்தின் 10 ஆம் தேதி முதல் மாத இறுதிவரை உள்ள இருப்பு பணத்தில் சராசரியை இருப்பாக கொண்டு வட்டியை கணக்கிடுகின்றன.

இனி உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பை தினசரி கணக்கிட்டு, அதற்கு தகுந்தாற்போல் வட்டி வழங்கப்பட உள்ளது.

ரிசர்வ் வங்கி, சென்ற வருடம் ஏப்ரல் மாதமே, தினசரி இருப்பு அடிப்படையில் வட்டியை கணக்கிடும் படி வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இதற்கு ஏற்றார் வங்கிகளில் மாற்றம் செய்ய வேண்டிய திருப்பதால், புதிய வட்டி கணக்கிடும் முறையை ஒத்திவைக்கும் படி கேட்டுக் கொண்டன. அத்துடன் வங்கிகளின் சங்கமான இந்தியன் பாங்க் அசோசிசன், புதிய முறையை மேலும் ஆறு மாதத்திற்கு தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கி, சேமிப்பு கணக்கில் தினசரி இருப்பில் உள்ள பணத்திற்கு வட்டியை கணக்கிட வேண்டும். இதற்கு தகுந்தாற்போல் கம்ப்யூட்டரில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். இது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக நடைபெற தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக