திங்கள், 22 பிப்ரவரி, 2010

பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை: செபி


பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 16 பேருக்கு தடை விதித்துள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக, பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் ​(செபி)​ தெரிவித்துள்ளது.

இவர்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் கூட்டு சேர்ந்து ஈடுபட்டதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹேமலதா ரமேஷ் ஹங்கரே,​​ ராஷ்மி ஆர் காந்தி,​​ அனில் ராஜ்மல் ஷா,​​ அல்பேஷ் ஆர் ஷா,​​ ஜிதேந்திர மன்னாலால் ஜெயின்,​​ ரேணு மதுசூதன்,​​ பொலிவால் ஹஸ்முக்,​​ வால்சந்த் ஜெயின்,நரேஷ் வி ரஜாவத் உள்ளிட்ட பதினாறு பேர், கூட்டு சேர்ந்து ஒருங்கிணைந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதாக செபி தெரிவித்துள்ளது.

இவர்கள் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயற்கையாக சில நிறுவனங்களின் பங்கு விலையை உயர்த்தியுள்ளனர்.​ அத்துடன் சில பங்குகள் அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.​ ஆல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ்,​​ ஏசியன் ஸ்டார் நிறுவனம்,​​ கேஎஸ்எல் இண்டஸ்ட்ரீஸ்,​​ மாவென் பயோடெக்,​​ பனோர்மிக் யுனிவர்சல்,​​ ராசி எலெக்ட்ரோட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் அதிகம் விற்பனையானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இதனால் பயனடைந்த 16 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு தேசிய பங்கு பரிவர்த்தனை டெபாசிட்டரி நிறுவனத்துக்கு ​(என்எஸ்டிஎல்)​ உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக