செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி: இலங்கை


இலங்கையில் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை நீக்க இந்தியாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளை பத்த நாட்களில் இறக்குமதி செய்யப்போவதாக இலங்கை உடல்நல துறை செயலாளர் நிகால் ஜெயதிலகா தெரிவித்தார்.

இது குறித்து நிகால் ஜெயதிலகா கூறுகையில், மருத்துவ மனைகளில் நிலவும் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் தேவைப்படும் மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

இந்த வார தொடக்கத்தில் மருத்துவ மனைகள், இதன் தொடர்புடையவர்களுடன் நடந்த கூட்டத்தில், மருந்து தட்டுப்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உடல்நல துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபாலா டி சில்வாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்தரவையின் ஒப்புதல் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

தற்சமயம் தேவைப்படும் மருந்தில் 80 விழுக்காடு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்று ஜெயதிலகா தெரிவித்ததாக அரசின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக