ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
மார்ச் 8: பொருட்காட்சியில் மகளிருக்கு இலவச அனுமதி.
வரும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, சென்னையில் நடந்து வரும் சுற்றுலாப் பொருட்காட்சியில் மகளிருக்கு இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது.
கடந்த 22.12.2009 அன்று 36-வது இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சி முதலமைச்சர் கருணாநிதியால் சென்னை தீவுத்திடலில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒரு புறம், தனியார் நிறுவனங்களின் கடைகளும், விற்பனைப் பிரிவுகளும், மற்றொரு புறம் அரசு துறைகளின் விளக்கக் கூடங்களும் அமைந்துள்ளன. சென்னையில் வசிக்கும் ஏராளமான குடும்பத்தினர் சுற்றுலாப் பொருட்காட்சிக்கு வந்து அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டு களிக்கின்றனர்.
இப்பொருட்காட்சியினை இதுவரை மொத்தம் 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இதுதவிர இரண்டரை லட்சம் மாணவ-மாணவிகளும் குடும்பத்துடன் பொருட்காட்சியினைப் பார்வையிட்டுள்ளனர். இப்பொருட்காட்சியின் வாயிலாக இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
அதன்படி, வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுவதால், அந்நாளில் சுற்றுலா தொழில் பொருட்காட்சிக்கு வரும் அனைத்து மகளிரும் நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி பொருட்காட்சியினைப் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த சுற்றுலாப் பொருட்காட்சி வருகிற 14.3.2010 அன்றுடன் நிறைவு பெறுகிறது என்று அரசு செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக