ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டிற்கு விருது


ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட், 2010 ஆம் ஆண்டின் சிறந்த மியூச்சவல் பண்ட நிறுவனத்திற்கான விருதை பெற்றுள்ளது.

இந்த விருதை சி.என்.பி.சி-டிவி18-கிரிசல் ஆகியவை, மல்டி கமோடிட்டி எக்சேஞ்சுடன் இணைந்து வழங்கியுள்ளன.

இது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், சிறந்து விளங்கும் தன்மைக்காக வழங்கப்படுகிறது.

2008-09 ஆம் வருடம் மிகுந்த பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடி மிகுந்ததாக இருந்தது. இது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாகவும் இருந்தது. இந்த சிரமமான காலத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், நீண்ட கால நோக்கில் முடிவுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டனர்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் டிவி18 இயக்குநர் அஜய் சோக்கோ பேசுகையில், நாம் நெருக்கடியில் இருந்து மீண்டு வர முதலீட்டாளர்களின் நம்பிக்கை, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு மிக முக்கியம். மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் மக்களின் சேமிப்பை திரட்டி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் செபி சேர்மன் சி.பி.பாவே, செபி முழுநேர இயக்குநர் எம்.எஸ். சாகு, கிரிசல் மேலாண்மை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரூபா குட்வா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக