புதன், 17 பிப்ரவரி, 2010

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் 1246 கிளார்க் பணியிடங்கள்!

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் 1246 கிளார்க் பணியிடங்கள்!

இந்த ஆண்டு வங்கித் துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

பெரிய வணிக வங்கிகளுள் ஒன்றான பஞ்சாப் & சிந்த் வங்கி (PSB) நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளுக்கு 1246 எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநில வாரியாக இந்த கிளார்க் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒரு விண்ணப்பதாரர் ஒரு மாநில பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தமிழகத்தில் 43 காலியிடங்கள் உள்ளன. எந்த மாநில காலியிடத்துக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநிலத்தில் உள்ள தேர்வு மையத்தில் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். மேலும் அந்த மாநில மொழியை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

தகுதிகள்:

குறைந்த பட்சத் தகுதியாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் (பிற வங்கிகளுக்கு பிளஸ் டூ முடித்திருந்தால் போதும்). குறைந்தது 50 சதவீதத்துடன் இப் படிப்பை முடித்திருப்பதும் அவசியம். எம்.எஸ்., ஆபிஸ் சாப்ட்வேரிலும் சிறப்பான திறன் பெற்றிருக்க வேண்டும்.

25.1.2010 அன்று தேவையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

வயது:

1.1.2010 அன்று 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செய்யப்படும் முறை இப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் சென்னையில் மட்டுமே போட்டித் தேர்வு நடத்தப்படும். இது ஏப்ரல் 4 அன்று நடக்கும். இதில் அப்ஜக்டிவ் முறைப் பகுதியும் விரிவாக விடையளிக்கும் பகுதியும் இடம் பெறும்.

ஆங்கிலம், கணிதம், ரீசனிங் மற்றும் கம்ப்யூட்டர்மார்க்கெட்டிங் ஆப்டிடியூட் பகுதிகள் இடம் பெறும். ஆங்கிலத் திறனை பரிசோதிப்பதாக விரிவாக விடையளிக்கும் பகுதி இடம் பெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப் பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50 மட்டுமே.

வங்கியின் இணைய தளத்திலிருந்து வவுச்சர் படிவத்தை டவுண்லோடு செய்து கொண்டு இந்த வங்கியின் கிளை ஒன்றில் சென்று பணமாகச் செலுத்தி இந்த வவுச்சரை நிரப்பி அந்தக் கிளையில் பணம் செலுத்திய விபரங்களை அதில் நிரப்பிக் கொள்ள வேண்டும். பிப்ரவரி 18 வரை இதை செலுத்தலாம். பணம் செலுத்திய பின் கிடைக்கும் டிரான்சாக்ஷன் ஐ.டி.,யை ஆன்லைனில் பதிவு செய்யும் போது குறிப்பிட வேண்டும்.

எழுத்துத் தேர்வின் போது வவுச்சர் ஒரிஜினலை எடுத்துச் செல்ல வேண்டும். ஜனவரி 25 முதல் பிப்ரவரி 18 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் போது கிடைக்கும் பதிவுத் தாளின் நகலை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணையதள முகவரி www.psbindia.com

கடைசி நாள் பிப்ரவரி 18, 2010.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக