வியாழன், 18 பிப்ரவரி, 2010

இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌திக‌ரி‌க்கு‌ம் ஒ‌வ்வாமை!


ஒ‌வ்வாமை என‌ப்படு‌ம் அலர்ஜி காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிக ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நகர்ப்புற மக்களையே இந்த ஒவ்வாமை அதிகம் தாக்குகிறது.

சு‌ற்று‌ச்சூழ‌ல் ‌சீ‌ர்கேடு‌ம், இயந்திரமயமான வாழ்க்கை முறையு‌ம் 40 சதவீதம் பேர் ஒவ்வாமையால் அவதியுற‌க் காரணமா‌கிறது.

ஒவ்வாமை என்பது சுகாதாரமற்ற சூழலா‌ல், ஒரு ம‌னித‌னி‌ன் சுகாதார‌ம் பா‌தி‌க்க‌ப்படுவதா‌ல் ஏ‌ற்படு‌ம் எதிர்விளைவே ஒவ்வாமையாகும்.

உடலு‌க்கு ஒ‌‌வ்வாத ஒரு பொரு‌ள், உடலுக்குள் செல்லும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக எ‌தி‌ர் தா‌க்குத‌ல் நட‌த்து‌கிறது. அத‌ன் தா‌க்க‌‌த்தை‌த்தா‌ன் நா‌ம் ஒ‌வ்வாமையாக உண‌ர்‌கிறோ‌ம்.

ஒ‌வ்வாமை‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் பல உ‌ள்ளன. ‌திடீரென ஏ‌ற்படு‌ம் தொட‌ர் தும்மல், மூக்கு, கண்களில் எரிச்சல், நீர் ஒழுகுதல், சருமத்தில் தடிப்பு, ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது கூட ஒவ்வாமையின் அறிகுறியாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களுக்கு ஒ‌‌வ்வாமை உண்டாகும். பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழலால்தான் பெரும்பாலானோருக்கு ஒ‌வ்வாமை உருவாகிறது.


WDசென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு அதிகம் ஏற்படுகிறது. நகரத்தை சுற்றி எண்ணற்ற தொழிற் கூடங்கள் அமைந்துள்ளன. நகர வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல இலட்சங்களை தாண்டிவிட்டது. இந்த தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெ‌ளியே‌ற்று‌ம் புகையே காற்று மண்டலத்தை மாசடைய செய்துவிட்டன. இந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் உடலானது பலவகையில் பாதிக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் ஒவ்வாமை.

மாசடை‌ந்த கா‌ற்று, சுகாதாரமற்ற குடிநீர், பூ‌ச்‌சி‌க் கொ‌‌ல்‌லி மரு‌ந்துக‌ள் சே‌ர்‌த்து ப‌‌‌யி‌ரிட‌ப்ப‌ட்ட பொரு‌ட்க‌ள், கல‌ப்பட உணவு, தேங்கி நிற்கும் சாக்கடை நீர், நாற்றம் வீசும் குப்பைகள், மனிதக் கழிவுகள் இவற்றாலும் உடலில் ஒ‌வ்வாமை ஏற்பட வாய்ப்பு ஏ‌ற்படு‌கிறது.

மேலும் சிலருக்கு உணவுப் பொருட்களாலும் ஒவ்வாமை உண்டாகும். முட்டை, பால், கருவாடு, கத்தரிக்காய் போன்றவற்றாலும், புளித்துப்போன பொருட்களாலும் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக