திங்கள், 22 பிப்ரவரி, 2010

பட்ஜெட்: தகவல் தொழில் நுட்ப துறைக்கு சலுகைகள் நீடிக்கப்பட வேண்டும்!


தகவல் தொழில் நுட்ப துறையைச் சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பு, சேவை வழங்கல் உட்பட எல்லா நிறுவனங்களுக்கும் வரி சலுகைகளை நீடிக்க வேண்டும். இது இந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் போட்டியை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று பிரபல கணக்கு தணிக்கை ( ஆடிட்) நிறுவனம் பிரிஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர் கூறியுள்ளது.

சர்வதேச அளவிலான கணக்கு தணிக்கை நிறுவனமான பிரிஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனத்தின் தொழில் நுடப பிரிவு தலைவர் ஹரி ராஜகோபாலச்சாரி மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் பற்றி கருத்து கூறுகையில், அந்நிய செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் குறைகிறது.

மத்திய அரசு எதிர் வரும் பட்ஜெட்டில் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ள சிறு, நடுத்தர பிரிவு நிறுவனங்களுக்கு நீண்ட கால வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். இவை எந்த பகுதியில் அமைந்திருந்தாலும், வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக