வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

அடுத்த ஆண்டு மோட்டரோலா நிறுவனம் இரண்டாக பிரியும்


சிகாகோ : பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான மோட்டரோலா, 2011ம் ஆண்டின் முதல் காலாண்டில் இரண்டு தனி நிறுவனங்களாக பிரிந்து செயல்படும் என அதன் தலைவர் டேவிட் டோர்மென் தெரிவித்துள்ளார். அவ்வாறு பிரிக்கப்படும் மோட்டரோலா கம்பெனியில் ஒன்று மொபைல் தயாரிப்பு துறையையும், மற்றொன்று நெட்வொர்க் துறையையும் கவனிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுப் பணித்துறைகளாக இக்கம்பெனிகள் செயல்பட இயக்குனர்கள் குழு ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும், நீண்ட கால பங்குதாரர்களின் எண்ணிக்கையை அதிப்பதற்காகவும் நிறுவனத்தின் எதிர்கால நலன் கருதியுமே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இல்லினோயிஸ் கிளையின் உதவி தலைமை நிர்வாகி சஞ்சய் ஜா, மொபைல் தயாரிப்புத்துறை நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக