மும்பை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலரின் மதிப்பு 11 பைசா குறைந்தது.
காலையில் 1 டாலரின் விலை ரூ.46.39 பைசாவாக குறைந்தது. இது வியாழக்கிழமை இறுதி விலையை விட 11 பைசா குறைவு.
வியாழக்கிழமை ரூபாயின் மதிப்பு 02 பைசா குறைந்து, 1 டாலரின் விலை ரூ.46.50 ஆக உயர்ந்தது.
பங்குச் சந்தையில் காலையில் சாதகமான நிலை இருப்பதே, டாலரின் மதிப்பு குறைய காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக