வியாழன், 11 பிப்ரவரி, 2010

அண்ணன்-தங்கையான காதல் ஜோடி!

அரியானா மாநிலம் கேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்பர்வால். இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

சதீஷ் பர்வால் பெர்வால் கோத்ரா என்ற ஜாதியைச் சேர்ந்தவர். கவிதா பானிவல் கோத்ரா என்ற ஜாதியைச் சேர்ந்தவர்.

இரு ஜாதியைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்வது இல்லை.
ஏன் என்றால் இரு ஜாதியைச் சேர்ந்தவர்களும் சகோதரர் உறவு முறை உள்ளவர்களாக கருதுகின்றனர். எனவே தான் அவர்களுக்குள் திருமண உறவு இருப்பது இல்லை.
இதை மீறி சதீஷ், கவிதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதுபற்றி ஊர் பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையிலும் பஞ்சாயத்து விசாரணை நடத்தியது.

6 மணி நேரம் நீடித்த இந்த பஞ்சாயத்தில் தம்பதிகள் இருவரும் பிரிய வேண்டும், அவர்கள் இனி அண்ணன்-தங்கையாக கருதப்படுவார்கள் என தீர்ப்பு கூறினார்கள்.

கவிதா தனது குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு சென்று விட வேண்டும். குழந்தைக்கு சதீஷ் தந்தை ரூ. 3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். 28 நாளில் தீர்ப்படி நடக்கா விட்டால் பஞ்சாயத்து கடும் தண்டனை வழங்கும் என்றும் தீர்ப்பில் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக