ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பிளஸ் 2 தே‌ர்வு இ‌ன்று தொட‌‌க்க‌‌ம்: 7.53 ல‌ட்ச‌ம் மாணவ‌ர்க‌ள் எழுது‌கிறா‌ர்க‌ள்.


த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ன்று தொட‌ங்கு‌ம் பிளஸ் 2 தேர்வை 7.53 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்2 பொது‌த் தேர்வு த‌மிழக‌ம் முழுவது‌ம் இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 7 லட்சத்து 53 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் பள்ளிகள் மூலம் 6 லட்சத்து 93 ஆயிரம் பேர்களும், தனித்தேர்வர்களாக 60 ஆயிரம் பேர்களும் எழுதுகிறார்கள். இதற்காக 1,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 11 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகி‌ன்றன‌ர்.

பிளஸ்2 தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணிவரை நடைபெறும். வினாத்தாள் வாசிப்பதற்காக 15 நிமிடம் வழங்கப்படுகிறது. பிளஸ்2 தேர்வைத் தொடர்ந்து, 10‌ஆ‌ம் வகு‌ப்பு மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 23ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆ‌ம் தேதி வரை நடைபெறுகின்றன.

மாணவ-மாணவிகள், தேர்வு எழுதும் அறைக்கு தேர்வு தொடங்கிய 15 நிமிடங்கள் கழித்து தேர்வு எழுத வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் எக்காரணம் கொண்டும் செல்போன் கொண்டுவரக்கூடாது. அவர்கள் மட்டுமல்ல தேர்வு கண்காணிப்பாளர்களும் தேர்வு எழுதும் அறையில் செல்போன் வைத்திருக்கக்கூடாது.

தேர்வு கூடத்திற்குள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டு தாள்களை பார்த்து எழுத முயற்சி செய்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், தேர்வுத்தாள் மாற்றுதல், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுதல் போன்ற செயல்கள் கடுங்குற்றங்களாக கருதப்படும்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் உடனடியாக தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். அதுமட்டுமல்ல அவர்கள் அதிகபட்சம் 2 வருடம் தேர்வு எழுத தடை செய்யப்படும். மொத்தத்தில் பல்வேறு தண்டனை வழங்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மாணவர்களுக்கு குடிக்க தண்ணீரோ அல்லது பேனா சரி இல்லை என்றாலோ தேர்வு கண்காணிப்பாளரிடம் தான் கேட்கவேண்டும்.

மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்கவும், கண்காணிக்கவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் 3ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆ‌ம் தேதி முடிவடைகிறது. 10ஆ‌ம் வகுப்பு தேர்வும் மார்ச் 3ஆ‌ம் தேதி தொடங்கி மார்ச் 31ஆ‌ம் தேதி முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக