வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

ஹெச்.டி.எப்.சி வங்கி வட்டி அதிகரிப்பு!


தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எப்.சி வங்கி, வைப்பு நிதிக்கு வட்டியை அதிகரித்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தது. இதை தொடர்ந்து ஏற்கனவே ஐ.டி.பி.ஐ வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை கால் விழுக்காடு அதிகரித்தது.

தற்போது ஹெச்.டி.எப்.சி வங்கி வைப்புநிதி வட்டியை ஒன்றரை விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

இந்த வட்டி உயர்வு குறித்து அஸிஸ் பார்த்தசாரதி கூறுகையில், தற்போதைய வட்டி உயர்வு, மற்ற வங்கிகளின் வட்டிக்கு இணையாக இருக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. வைப்பு நிதிக்கு சில முதிர்வு காலத்திற்கு, மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில், எங்கள் வட்டி விகிதம் குறைவாக இருந்தது. மற்ற வங்கிகளை போன்று சமமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

உதாரணமாக மூன்று வருடங்களில் முதிர்வு பெறும் வைப்பு நிதிக்கு, ஹெச்.டி.எப்.சி வங்கியின் வட்டி விகிதம் 6 முதல் 7.25 விழுக்காடாக இருந்தது. இது மற்ற வங்கிகளை விட கால் முதல் அரை விழுக்காடு வரை குறைவு. எங்கள் வங்கியின் வைப்பு நிதியில் பெரும்பான்மையானவை 1 வருடம் முதல் 3 வருடங்களுக்குள் முதிர்வு பெறுபவை. கடந்த இரண்டு வருடங்களாக மொத்த வைப்பு நிதியில் 57 விழுக்காடு வரை, 1 முதல் 3 வருடங்களுக்குள் முதிர்வு பெறுபவையாக உள்ளன. அத்துன் 25 விழுக்காடு வைப்பு நிதி ஒர வருடத்திற்குள் முதிர்வு பெறுபவையாக உள்ளன என்று தெரிவித்தார்.

ஹெச்.டி.எப்.சி வங்கி வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்படுமா என்று கேட்டதற்கு அஸிஸ் பார்த்தசாரதி பதிலளிக்கையில், இது நிதி சந்தையை பொறுத்தது என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, உடனடியாக கடனுக்கான வட்டியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ-யின் துணை மேலாண்மை இயக்குநரும், தலைமை நிதி பிரிவு அதிகாரியுமான எஸ்.ரஞ்சன் கூறுகையில், நாங்கள் சில காலம் பொறுத்திருப்போம். மற்ற வங்கிகள் அதிகரித்தால், நாங்களும் உயர்த்துவோம் என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடும் போது, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை முக்கால் விழுக்காடு அதிகரித்து. இதனால் நிதி சந்தையில் இருந்து ரூ.36 ஆயிரம் கோடி பணப்புழக்கம் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக