வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

நாளை ‘வேலன்டைன் டே’ காதலர்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை


சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. காதல் ஜோடிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். கடற்கரையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். பெங்களூர் போல் சென் னையில் யாராவது காதலர்களிடம் தகராறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று சொல்லி கொண்டு போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை.

மெரினா கடற்கரைக்கு யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக வரலாம், போகலாம். எந்த தடையும் கிடை யாது. ரவுடிகளின் பட்டியலை தயாரித்து வருகிறோம். ரவுடிகளில் சிலர் வெளி மாவட்டத்துக்கு சென்று விட்ட னர். அவ்வாறு சென்றவர்கள் பட்டியலை தயாரித்து அந்தந்த மாவட்டத்துக்கு அனுப்பி வைத்து விடுகிறோம். வெளி மாநிலங்களில் இருந்தால் அங்கும் அனுப்பி வைப்போம். அதிக நாள் கவனத்துக்கு வராமல் ரவுடித் தனம் செய்பவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்போம். பிடிவாரன்ட் நிலுவையில் உள்ள 12 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம். இவ்வாறு கமிஷனர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக