ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
பெண்களின் சிரிப்பிற்கு காரணம் என்ன?
ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 10 பெண்களிடமும், 10 ஆண்களிடமும் நகைச்சுவைக்கான சித்திரங்கள் கொடுக்கப்பட்டு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது.
நகைச்சுவை சித்திரங்கள் படத்தில் இருந்த நகைச்சுவையான வசனங்கள் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தது தெரிய வந்துள்ளது.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது.
அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது. எனவே இயல்பான நகைச்சுவைகளுக்குக் கூட அவர்களுக்கு சிறப்பாகத் தெரிகிறது.
இதனால் பெண்களின் மூளை எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் நகைச்சுவை சற்று கூடுதலாக இருந்தால் பெண்கள் இடைவிடாமல் சிரிக்கத் துவங்கிவிடுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக